பல மொழிகளையும் மதங்களையும்  பல்லின கலாச்சார விழிமியங்களையும் கொண்ட ஓர் பன்முகத்தனமையுடன் கூடிய ஓர் நாடேகவே சுவிற்சர்லாந்தினை  சோசலிச ஜனநாயக கட்சி கருதுகின்றது.

இரண்டு மில்லியனிற்கு அதிகமானோர் சுவிற்சர்லாந்து பிராஜா உரிமையை பெற்றுள்ளனர். இவர்கள் இந்நாட்டு பிரஜைகள் போன்று விளையாட்டு கல்வி அரசியல் போன்ற பல துறைகளிலும் தடம் பதித்துள்ளனர். அதுமட்டு மல்லாது இந்நாட்டிற்கு வரிசெலுத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் இந்நாட்டு பிரஜைகளுடன் எம்மில் ஓருவாராக இணைந்துள்ளனர். அபிப்பிராய வாக்கெடுப்பு தேசிய வாக்கெடுப்பு போன்ற அரசியல் தீhமானங்களில் மட்டும் கலந்துகொள்ள இயலாது தவிர்க்கபட்டுள்ளனர்.

ஐரோப்பிய அரசுகளுடன் ஓப்பிடும் பொழுது சுவிற்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமானதும் கட்டணதொகையும் அதிகமானது. புதிய வெளிநாட்டவர்களிற்கான சட்டத்தின் பிரகராம் மேலும் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதலில் பல தடைகள் கொண்டுவரப்;படவுள்ளது. 01.01.2018 இலிருந்து தனியே C வதிவிடப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே சுவிற்சர்லாந்து குடியுரிமை விண்ணப்பிப்பதற்கான தகுதிபெற்றவர்கள் ஆவார்கள். இதுவரைகாலமும் B வதிவிட அனுமதிபெற்றவர்களும் குடியுரிமைக்கு விண்ணப்பிப்தற்கு தகுதிபெற்றவர்களாக இருந்தனர். இதனடிப்படையில் பார்க்கும்போது 650000 B வதிவிட அனுமதி பெற்றவர்கள் சுவிற்சாலாந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியை இழக்கின்றனர்.

  • 12 ம் திகதி மாசி மாதம் 2017 நடைபெற இருக்கும் இலகுவாக குடியுரிமை பெறுதலிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு ஆதரவான பிரச்சாரத்தில் கலந்து கொள்ளுங்கள்.
  • SP MigirantInnen இவ்வாண்டு ஆவணி மாதம் முதலாம்திகதி B வதிவிட அனுமதிபெற்றவர்களிற்கான குடியுரிமை விண்ணப்பிப்தற்குமான கோரிக்கையும் பிரச்சாரத்தினை ஆரம்மபித்துள்ளது. நாங்கள் அனைத்து தரப்பினர்களிற்கு இத்தகவல்களை அறியப்படுத்துவதுடன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிவருகின்றோம். சுவிற்சர்லாந்து மேலும் அனைவருக்குமான நாடாக மாற்றம் பெற விரும்புகின்றோம். சோசலிச ஐனநாயக கட்சியின் குடியுரிமை ஆலோசகர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் இங்கு எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.

தயவு செய்து இக் கோரிக்கையினை மேலும் பலருக்கு தெரியப்படுத்துங்கள். இத்துண்டுபிரசுரம் கீழ்வரும் மொழிகளில் கிடைக்கப்பெறும்.